×

உதயநிதி ஸ்டாலின் கைதானதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

செய்யூர்: திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் நேற்று மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது கைது கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பகுதியில் பகுதியில் திமுக சார்பில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலில்  இலத்தூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாபு தலைமை தாங்கினார். மறியலில் செய்யூர் ஊராட்சி செயலாளர் தணிகாச்சலம் மற்றும் இளைஞரணி துணை அமைப்பாளர் அருண்மொழிவர்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த மறியலில் ஈடுபட்டவர்களை செய்யூர் போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். உத்திரமேரூர்: உத்திரமேரூரில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணி தலைமையிலான திமுகவினர் உத்திரமேரூர் வந்தவாசி சாலை உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உத்திரமேரூர் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய அமைப்பாளர் கார்த்திக் உட்பட திமுகவினர் 50கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கூடுவாஞ்சேரி: 3-வது நாளாக, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து  காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியம் திமுக சார்பில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி கார்த்திக், நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூர் திமுக செயலாளர் வக்கீல் ஜி.கே. லோகநாதன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை கூடுவாஞ்சேரி ஜி எஸ்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். இதில், பேரூர் நிர்வாகிகள், முன்னாள் வார்டு கவுன்சிலர்கள், இளைஞரணி மற்றும் மாணவரணியினர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,road ,Udayanithi Stalin ,arrest ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...