×

ஏகானாம்பேட்டை ஊராட்சியில் சீரமைத்த ஒரே மாதத்தில் சேதமடைந்த குளக்கரை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது ஏகனாம்பேட்டை ஊராட்சி. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கோயில் குளங்கள் உள்ளன. இதனை சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இதற்காக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் திருவாலீஸ்வரர் கோவில் குளம் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ₹ 24 லட்சம்  மதிப்பீட்டில் குளத்தை ஆழப்படுத்தவும்,கரைகளை பலப்படுத்தும் பணி நடந்து முடிந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக இக்குளம் முழுமையாக நிரம்பின. அதனால் குளத்தின் கரைகள் பலமிழந்து விரிசல்கள் ஏற்பட்டு கரைகள் ஒரு சில இடங்களில் அரிப்பு தன்மையுடன்  காணப்படுகின்றன.

இதனால் இக்குளம் தரமற்ற முறையில் சீரமைக்கப்பட்டுள்ளதாக இந்த கிராமத்து மக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏகனாம்பேட்டை ஈஸ்வரன் கோவில் குளம் பணி முடிக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே குளத்தின் கரைகள் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதேபோல் இந்த ஈஸ்வரன் கோவில் குளத்தை மீண்டும் புனரமைத்து தரமான முறையில் கரைகளை பலப்படுத்த வேண்டும். கரைகளின் மேல் பகுதிகளிலும் சிமென்ட் பூசி பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : pond ,Unseen ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்