டாஸ்மாக்கை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல்

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவில் அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரசு மேல்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, பேருந்து நிறுத்தம், மார்கெட், மருத்துவமனை, அரசு நூலகம் மற்றும் கல்லூரி அருகே இந்த டாஸ்மாக் கடைகள் உள்ளதால் மாணவர்கள், பெண்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த கடைகளை மூட வலியுறுத்தி இப்பகுதி மக்கள் சென்னை மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு மனு அளித்து வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று, மேற்கண்ட டாஸ்மாக் கடைகளை  மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று பெண்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘பள்ளி, கல்லூரி, மார்க்கெட், நூலகம் அருகே உள்ள இந்த டாஸ்மாக் கடைகளால் பெண்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, உடனடியாக இதை மூட வேண்டும். உரிய நடவடிக்கை இல்லையெனில், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என்றனர்.

Related Stories: