×

மாநகரில் 4வது கட்டமாக கொரோனா பாதிப்பில் மீண்டு பணிக்கு திரும்பிய போலீசாருக்கு சான்றிதழ்

திருச்சி, நவ.22: கொரோ னா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் தடுப்பு பணியில் டாக்டர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் தீவிர களப்பணியாற்றினர். இதில் டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஒரு சிலர் இறந்தனர். இதில் திருச்சி மாநகரில் 1,769 போலீஸ் அதிகாரிகள், போலீசார் பணியில் உள்ளனர். அதில் கொரோனா நோய் தொற்று காலத்திலும் சுயநலம் பாராமல் பொதுநலன் மட்டுமே கருதி பணியாற்றியதில் தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 142 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் மாநகரில் 4வது கட்டமாக நேற்று கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய 32 போலீசாரின் பணியை பாராட்டி அவர்களை வரவேற்கும் விதமாக மாநகர கமிஷனர் லோகநாதன் தலைமையில், துணை கமிஷனர்கள் பவன்குமார்ரெட்டி, வேதரத்தினம் ஆகியோர்கள் மேற்பார்வையில் “பணி பாராட்டு சான்றிதழ்” மற்றும் பழங்கள், முககவசங்கள், ஊட்டச்சத்து பானங்கள், பேரீச்சம்பழம், கையுறை, சானிடைசர் ஆகியவை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

Tags : city ,phase ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு