×

மழையால் பயிர்கள் சேதமடைய வாய்ப்பு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

விருதுநகர், நவ. 22: விருதுநகர் கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள தகவல்: மாவட்டத்தில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளதால் வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு மக்காச்சோளம் ரூ.262, சோளம் ரூ.112, கம்பு ரூ.132, ராகி ரூ.147, பாசிப்பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ரூ.192, பருத்தி ரூ.430, நிலக்கடலை ரூ.275, எள் ரூ.106, சூரியகாந்தி ரூ.169, கரும்பு ரூ.2,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2020-21 நடப்பு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் உளுந்து, பாசிப்பயறு வகைகளுக்கு 30-11-2020, மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, துவரை, பருத்தி பயிர்களுக்கு 21-12-2020, நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு 20-1-2021, எள் பயிர்களுக்கு 31-1-2021, கரும்பிற்கு 31-10-2021 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் பதிவின் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், விஏஓ வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் இணைத்து கட்டண தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு