மாவட்டத்தில் 40 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

மதுரை, நவ. 22: மதுரை மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த பாண்டி, சமூக ஆர்வலர். இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திலும் பாண்டி தகவல்  பெற்றுள்ளார். இதன்படி, 2010 முதல் 2020 அக்.வரை 47,244  மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்  நலத்துறை மூலம் 21 வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவி பணம்  வழங்கப்படுகிறது. இதன்படி 2010 முதல் 2020 அக். வரை 6,565 பேருக்கு மட்டுமே  உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பதாக தகவல் தரப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு  பார்க்கும்போது, 40,679 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை அரசு வழங்க  வேண்டியுள்ளது.  மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வின்றி, இந்த உதவித்தொகையை  வாங்க வழி தெரியாமல் உள்ளனர்.

இதேபோல, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களுக்கு மாநகராட்சி பதில் அளித்துள்ளது. இதன்படி, மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுவதாகவும், இங்கு 23 பெண் மருத்துவர்கள் இருப்பதும், 9 மருத்துவர்களுக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆபரேஷன் தியேட்டர்களில், 2 ஆபரேஷன் தியேட்டர் செயல்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  32 மருத்துவமனையில் 21 மருத்துவமனையில் போன் வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: