ஒட்டன்சத்திரத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்

ஒட்டன்சத்திரம், நவ.22: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 1 முதல் 18 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் பஸ்நிலையம் எதிரே காந்தி காய்கறி மார்க்கெட், நாகனம்பட்டி புறவழிச்சாலையில் காமராஜர் மார்க்கெட், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் என நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நகர் பகுதிகளில் சாலை விரிவாகத்திற்காக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால், சாலைகள் குறுகளாக உள்ளது. இந்நிலையில் வணிக வளாகங்கள் முன்பு வாகனங்கள் அதிகளவில் அணிவகுத்து நிற்கின்றது. ரோட்டில் நடந்து செல்பவர்கள் கூட மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். மேலும் நகர் பகுதிகளில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது.

ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் முன்பு மார்க்கெட் உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூர்த்த தினங்களில் அதிகளவில் விவசாயிகள் காய்கறிகளை கொண்டுவருவதாலும் போக்குவரத்திற்கு மிகுந்த நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல்துறையினர் அடிக்கடி போக்குவரத்தை சரி செய்து, எச்சரிக்கை செய்தாலும் பஸ்நிலையம், தாராபுரம் ரவுண்டனா, தாராபுரம் சாலை, மார்க்கெட் ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.கடந்தாண்டு சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில், நகர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனால், சில தினங்களிலேயே மீண்டும் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளது.எனவ, மாவட்ட நிர்வாகம் ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடையில்லா போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: