கனமழை எதிரொலியால் குண்டும், குழியுமாக மாறிய ரோடுகள்

திருப்பூர், நவ. 22:  திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் தேக்கத்தால், ரோடு சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த ரோடுகளை உடனடியாக சீரமகை–்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூரில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இம்மழையால், தாழ்வாக உள்ள ரோடுகள் மற்றும் முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை வெள்ளத்துடன், கழிவுநீரும் கலந்ததால், பல இடங்களில் குட்டையாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. பிரதான ரோடுகள் மற்றும் நகர பகுதிக்குள் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள கிளை ரோடுகள் மற்றும் வீதிகளில், மழைநீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன. ரோடு அரிக்கப்பட்ட நிலையில், கனரக வாகனங்கள் சென்றதால், குழிகள் மற்றும் பள்ளங்கள் உருவாகியுள்ளன.

 சிதிலமடைந்த ரோடுகளில் செல்லும்போது, வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். இரவு நேரங்களில் சேதமடைந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி, கீழே விழுந்து காயமடைகின்றனர்.  குழிகள் மற்றும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால், இரவில் தண்ணீருக்குள் வாகனத்தை செலுத்துபவர்களும், திக்குமுக்காடி, பின் சுதாரித்து, கடந்து செல்கின்றனர். திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சிதிலமடைந்த ரோடுகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: