×

மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் மீட்போம் திமுக பொதுக்கூட்டம்

அயோத்தியாப்பட்டணம், நவ.22: கந்தாஸ்ரமம் அருகே, தமிழகம் மீட்போம் திமுக பொதுக்கூட்டம், காணொலி காட்சி மூலம் நடந்தது.  
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,சேலம் கிழக்கு மாவட்டம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமம் அருகே எஸ்.ஆர்.பி கிரிக்கெட் மைதானத்தில், தமிழகம் மீட்போம் என்னும் தலைப்பில் தேர்தல் பிரச்சார  சிறப்பு பொதுக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கள்ளக்குறிச்சி எம்பி பொன்.கவுதமசிகாமணி, சேலம் எம்பி பார்த்திபன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா மற்றும் அயோத்தியாபட்டணம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம் தெற்கு ஒன்றிய செயலாளர்கள்,பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஓமலூர்:ஓமலூர் தெற்கு ஒன்றியம்  பாகல்பட்டியில், ஒன்றிய செயலாளர் செல்வகுமாரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர்  அருண்பிரசன்னா, ரமேஷ், கருணாகரன், விஜயகுமார், கோபால்சாமி, குமார்,  பாலையன், வெங்கடேசன், ஆட்டோ தனபால், பிரவீன், பிரபாகரன், மரிமுத்தும்,  ரமேஷ், எழிலசரன், சின்னுசாமி, பாஸ்கர், உதயகுமார், ஆனந்த் உட்பட  நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இதேபோல்,  காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர்  ரவிச்சந்திரன் தலைமையில், திருநாவுக்கரசு, ராஜேந்திரன்,  அறிவழகன், சின்ராஜ் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

ஓமலூர் வடக்கு ஒன்றியம் சார்பில், தும்பிபாடி  சரக்கபிள்ளையூரில் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில், ஜெயவேல்,  ராஜா, ரமேஷ் குமார், நாகராஜன், செல்வி ராஜா, துரைசாமி, சிவஞானவேல்,  மகேந்திரன், கார்த்திக், பாஸ்கரன், முருகன், அழகேசன், கோவிந்தன், ஜெயமணி  செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,meeting ,Tamil Nadu ,MK Stalin ,
× RELATED திமுக செயற்குழு கூட்டம்