மருத்துவ படிப்பிற்கு தேர்வான தறித்தொழிலாளி மகள் முதல்வரிடம் வாழ்த்து

இளம்பிள்ளை, நவ.22: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் வேலு (40). தறித்தொழிலாளியான இவரது மகள் லதா(19). அழகப்பம்பாளையம் புதூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்தார். தொடர்ந்து மாணவி  நீட் தேர்வில் வெற்றி பெற்றார். இவருக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத  உள்  இட ஒதுக்கீட்டின் மூலம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் பயில இடம் கிடைத்தது. இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பெற்றோருடன் நேரில் சந்தித்த மாணவி, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். மாணவி லதாவின், 5 வருட மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணம் முழுவதையும்,  சங்ககிரி எம்எல்ஏ ராஜா ஏற்றுக்கொண்டார். இதன்படி முதலாண்டு மருத்துவ கல்வி கட்டண தொகை, மாணவியிடம் வழங்கப்பட்டது.

Related Stories:

>