×

அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் ராஜேஸ்குமார் வரவேற்றார்

நாமக்கல், நவ.22: நாமக்கல்  கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  கொல்லிமலை அமமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில், அமமுக  நிர்வாகிகள் வெள்ளையன், செந்தில், மணிவேல், அன்பு, பழனிவேல் ஆகியோர்,  அக்கட்சியில் இருந்து விலகி, மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் முன்னிலையில்,  திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து ராஜேஸ்குமார்  வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணைச்செயலாளர் பொன்னுசாமி,  ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், செந்தில்முருகன், மாணவர் அணி  அமைப்பாளர் தமிழ்செல்வன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி,  தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத், ஒன்றிய இளைஞர் அணி  அமைப்பாளர் கிருபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : executives ,Rajeskumar ,AIADMK ,DMK ,
× RELATED அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்