×

எருமப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த பெண் உயிருடன் மீட்பு

சேந்தமங்கலம், நவ.22: எருமப்பட்டி அடுத்த வடவத்தூரை சேர்ந்த விவசாயி புஷ்பராஜ்(50). இவரது மனைவி மல்லிகா(45). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, மல்லிகா தோட்டத்திற்கு துணி துவைக்க சென்ற போது, கால் தவறி 60 அடி ஆழ கிணற்றினுள் விழுந்துவிட்டார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த புஷ்பராஜ், நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சுமார் 1மணி நேரம் போராடி மல்லிகாவை உயிருடன் மீட்டனர்.

Tags :
× RELATED போலி மதுப்பாட்டில்கள் கடத்திய பெண் கைது