×

எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய வாலிபர் கைது

நாமக்கல், நவ. 22:  நாமக்கல் கேஎம்சி தெருவில் ஆனந்த் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு கடையை உடைத்த மர்ம நபர், ₹2 லட்சத்தை திருடி சென்றான். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கடையில் பணத்தை திருடிய நபர் குறித்த விபரங்கள் போலீசாருக்கு தெரிந்தது. தொடர்ந்து கடையில் திருடிய தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்த மலைராஜ் மகன் செல்வகுமார்(26) என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹1 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : shop ,
× RELATED காதலித்த பெண் கிடைக்காததால் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை