×

மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் உள்பட 350 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, நவ.22: திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நேற்று முன்தினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில், அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியதாக கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டணம், பர்கூர், போச்சம்பள்ளி, ராயக்கோட்டை, ஊத்தங்கரை, சூளகிரி, சிங்காரப்பேட்டை, கல்லாவி உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட திமுக எம்எல்ஏக்கள் செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி), பிரகாஷ் (தளி), முருகன் (வேப்பனஹள்ளி), சத்யா (ஓசூர்) உள்ளிட்ட 350 திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : riots ,DMK ,
× RELATED தாசில்தாரிடம் தகராறு செய்த 4 பேர் மீது வழக்கு!