×

உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து மாவட்டம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் 200க்கும் மேற்பட்டோர் கைது

தர்மபுரி, நவ.22: திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தர்மபுரி 4 ரோடு சந்திப்பு பகுதியில் நேற்று திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் சேட்டு தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட பொருளாளர் தருமச்செல்வன், முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், இளைஞரணி நிர்வாகிகள் செல்லதுரை, மகேஷ்குமார், துரை, காவேரி, மாங்கனி செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, அண்ணா துரை, கந்தசாமி, முருகன், லட்சுமணன், சிவகுரு, கவுதம், தண்டபாணி, மருத்துவர் அணி செந்தில்குமார், வெங்கடேசன் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்டேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏஎஸ் சண்முகம் தலைமையில், அதியமான் கோட்டையில், நேற்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பழனிசாமி, ராஜப்பன், தமிழ்நிதி, முத்துசாமி, முனுசாமி, கோவிந்த சாமி, முத்தமிழ், நவீன்குமார், தங்கம், வீரமணி, அன்பரசு, அந்தோணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். காரிமங்கலம்:  காரிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் கோபால், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சூடப்பட்டி  சுப்ரமணி தலைமையில், வெள்ளிச்சந்தை ஓசூர் சாலையில் நேற்று திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். சண்முகம், தீபா முருகன், ஹரிபிரசாத், கோவிந்தன், சிவகுமார், பழனிமுத்து, ராமமூர்த்தி  உட்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தூர்:  கடத்தூர் பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், நகர செயலாளர் கேஸ்மணி, சதாசிவம், பிரகாஷ், இளவரசன், சதீஷ்குமார், மதன்பாலாஜி மற்றும் பலரை போலீசார் அவர்களை கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.  அரூர்: மொரப்பூர் பஸ் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து, ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், துணை  செயலாளர் ஜெமினி, மற்றும் நிர்வாகிகள் இக்பால், சசிகுமார், நந்தி, ராஜ்,  வெங்கடேசன், கமலக்கண்ணன், பவுன்சாமி, நவாஸ்,  சின்னதம்பி,   முனிராஜ்,  ராஜேந்திரன், நாகராஜ், அமுதமணி, ரவிச்சந்திரன், இம்ரான்,  முபாரக், சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   

பென்னாகரம்: பென்னாகரம் பஸ் நிலையத்தில், ஒன்றிய செயலாளர்  செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் வானவில் சண்முகம், சின்னசாமி, சின்னசாமி, அறிவழகன், கூத்தபாடி சேகர், பெருமாள், தங்கவேல், கடமடை சேகர், கணேசன்,  போடூர் கிருஷ்ணன், வேல்முருகன், கண்ணப்பன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

Tags : district ,DMK ,arrest ,Udayanithi Stalin ,
× RELATED அம்மாபேட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்