விழுப்புரத்தில் பரபரப்பு பாஜக மாவட்ட தலைவர் மீது மகளிரணி நிர்வாகி பாலியல் புகார்

விழுப்புரம், நவ. 22: விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது மகளிரணி நிர்வாகி பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக மாநில தலைவருக்கு, விழுப்புரம் மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் காயத்திரி அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் முன்னாள் எம்எல்ஏ கலிவரதனை மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கும்போதே, எனக்கு கட்சியில் மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கி தருகிறேன். கட்சியில் பெரிய ஆளாக்குகிறேன் என கூறி ரூ.5 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளார். என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி வெளியே யாரிடமாவது சொன்னால் “என்னை தீர்த்துக்கட்டிவிடுவேன்” என கொலை மிரட்டல்விடுக்கிறார்.

கலிவரதனால் என் குடும்பம் நிர்கதியாய் உள்ளது. என்னைப் போன்ற பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார். எனவே மாவட்ட தலைவர் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து என் வாழ்க்கைக்கு தீர்வு காணுமாறு கோருகிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் எங்கள் பகுதியில் வந்து விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளியில் வரும். விசாரணை செய்து எனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது மகளிரணி நிர்வாகி பாலியல் புகார் கூறியுள்ள சம்பவம்

பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>