தொடர் மழையால் நீர்மட்டம் அதிகரிப்பு ஊசுட்டேரியில் மீண்டும் படகு சவாரி துவக்கம்

வில்லியனூர், நவ. 22: புதுச்சேரி வில்லியனூர் அடுத்துள்ள ஊசுட்டேரி, புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரிகளில் முதன்மையானதாக விளங்குகிறது. இது புதுச்சேரி-தமிழக பகுதிகளை உள்ளடக்கி 400 ஹெக்ேடர் பரப்பளவை கொண்டது. புதுச்சேரி 390 ஹெக்டேர் பரப்பளவும், தமிழகம் 410 ஹெக்டேர் பரப்பளவும் கொண்டுள்ளது. 15.54 சதுர கி.மீ நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்ட ஊசுட்டேரி, 4 கன

அடி நீர் கொள்ளளவை கொண்டது. இந்த ஊசுட்டேரிக்கு சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் இருந்தும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் இருந்தும் பருவமழையின் போது தண்ணீர் வருவது வழக்கம். இதனால் ஊசுட்டேரி சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து பலவகையான பறவைகள் ஏராளமானவைகள் வந்ததால் கடந்த 2008ல் புதுச்சேரி அரசு, ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் புதுச்ேசரி சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் படகு சவாரி விடப்பட்டது. இதன் மூலம் அரசு வருவாய் ஈட்டியது.

 கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை ெபாய்த்து போனதால் ஊசுட்டேரிக்கு தண்ணீர் வரத்து நின்று போனது. மேலும், ஏரியில் இருந்த தண்ணீரும் வற்றி வறண்டது. இதனால் பறவைகள் இடம்பெயர்ந்து விட்டன. படகு சவாரியும் நிறுத்தப்பட்டு அரசின் வருவாயும் குறைந்தது.

 இந்த நிலையில், இந்தாண்டு கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விளைநிலங்கள் மற்றும் ஆற்றுவாய்க்கால்களில் இருந்து ஊசுட்டேரிக்கு தண்ணீர் வந்தது. இதனால் ஊசுட்டேரியின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. இதையடுத்து தற்போது மீண்டும் படகு சவாரி துவக்கப்பட்டு, ஏரியின் மையப்பகுதி வரை படகு சென்று வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து விதவிதமான அரியவகை பறவைகளின் வருகையும் துவங்கியுள்ளது. ஏராளமான பறவைகள் ஏரியில் உள்ள குன்றுகளுக்கு குடிபெயர்ந்துள்ளன. இதனை காண்பதற்காக வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு பூங்கா மற்றும் கேலரி அமைத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

Related Stories: