புதுச்சேரியில் டி20 கிரிக்கெட் போட்டிகள் அதிரடி ரத்து

புதுச்சேரி,  நவ. 22:  புதுச்சேரியில் டி20 கிரிக்கெட் போட்டிகள் அதிரடியாக ரத்து  செய்யப்பட்டதால் ஓட்டலில் தங்கியிருந்த வெளிமாநில வீரர்கள் அறையை காலி  செய்து வெளியேறினர்.  புதுச்சேரி ேசதராப்பட்டில் கிரிக்கெட்  மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை விரிவு

படுத்த நீர்நிலைகள், அரசு  புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கவர்னர் கிரண்பேடிக்கு புகார்கள் சென்றது. இதுதொடர்பாக வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க  மாவட்ட கலெக்டருக்கு அவர் உத்தரவிட்டார்.  தாசில்தார்  அருண்அய்யாவு அளித்த புகாரின்பேரில், சேதராப்பட்டு எஸ்ஐ முருகன் தலைமையிலான  போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.   ஆக்கிரமிப்பு  இடத்தில், அமைக்கப்பட்ட கட்டிடம், போர்வெல், மின்விளக்குகளை அகற்ற நகரமைப்பு  குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் நீதிமன்றம் வாயிலாகவும்  புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேனுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. சில  தினங்களுக்கு முன் மைதானத்தில் குடிநீர், மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது.  இந்நிலையில், புதுச்சேரி சேதராப்பட்டு  மைதானத்தில் நடத்தப்பட இருந்த டி20 கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும்  அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.  கிரிக்கெட் அசோசியேஷன் இந்த நடவடிக்கையை  மேற்கொண்டதால் இப்போட்டிகளில் விளையாடுவதற்காக ஓட்டல்களில் தங்கியிருந்த வெளிமாநில கிரிக்கெட் வீரர்கள் 100க்கும்  மேற்பட்டோர் அறையை காலி செய்துவிட்டு ெசாந்த ஊருக்கு சென்றனர்.  புதுச்சேரி மாநில கிரிக்கெட் வீரர்களும் கவலையடைந்துள்ளனர்.  புதுச்சேரியில் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 11ம் தேதி தொடங்கிய நிலையில் 27ம் தேதி இறுதிப்போட்டி நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: