புதுவையில் 65 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, நவ. 22: புதுச்சேரியில் நேற்று புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 602 ஆக குறைந்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறியதாவது: புதுச்சேரி மாநிலம் முழுவதும் நேற்று 3,537 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை-32, காரைக்கால்- 16, ஏனாம்-3, மாகே-14 என மொத்தம் 65 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 609 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 36,648 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 35,437 (96.70 சதவீதம்) பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக நேற்று மட்டும் புதுவையில் 44 பேர், காரைக்காலில் 5 பேர், ஏனாமில் 11 பேர், மாகேவில் 22 பேர் என மொத்தம் 82 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வீடுகளில் 371 பேர் தனிமைக்கப் படுத்தப்பட்டு உள்ளனர். மருத்துவமனையில்  231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் உட்பட சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 602 ஆக குறைந்துள்ளது. இதுவரை 3,77,294 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 3,36,376 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: