×

வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

திண்டிவனம், நவ. 22: திண்டிவனம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஐசக் மகன் சாமுவேல் (22). இவர் தனது அக்காவை பைக்கில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரி சாலையில் சென்றார். ஜெயபுரம் அருகே சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் சாமுவேலின் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து சாமுவேல் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சாமுவேலிடம் செல்போன் பறித்து சென்ற நபர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கோட்டகுப்பம் தாலுகா சோதனைகுப்பம் கிராமத்தை சேர்ந்த மனோகர் மகன் ஜானகிராமன்(22), திருச்சிற்றம்பலம் இரும்பை ரோடு முருகன் மகன் சிரஞ்சீவி(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : teenager ,
× RELATED திடீரென கரண்ட் கட் செல்போன் வெளிச்சத்தில் நடந்த அமைச்சர் விழா