×

நான் யார் கூடயும் ஓடிட மாட்டேன்

விழுப்புரம், நவ. 22: விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர், மகளிரணி நிர்வாகி பேசும் ஆடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.நிர்வாகி: என் வயிறு பத்தி எரியுது, நீ நாசமாய் போய் விடுவாய்.மாவட்ட தலைவர்: தேவையில்லாமல் பேசாதே, தேவையில்லாமல் டென்ஷன் ஆகாதே, டென்ஷனை குறைத்து விட்டு வேலையை பார். நிர்வாகி: நீ நல்ல கதிக்கே போக மாட்டாய். (அழுகிறார்). மாவட்ட தலைவர்: தேவையில்லாமல் பேசாதே, எதற்காக நீ இப்போது அழுகிறாய், தேவையில்லாமல் சாபம் விடாதே. நான் உனக்கு இப்போது என்ன துரோகம் செய்துவிட்டேன். ஏண்டி இப்படி பண்ற, கொஞ்ச நாளைக்கு கட்சி வேலையை பார். ஆட்டோமெட்டிக்கா கடவுள் உனக்கு நல்ல வழி காட்டுவார்.

கம்முனு இரு, நீ என்னை திட்டுகிற வேலை வெச்சுக்காதே. சரி ரைட், ஓகே, கூல் டவுன், டேக் இட் ஈஸி. நான் வேற அழுதுடுவேன்டி.கொஞ்ச நாளைக்கு அமைதியா இரு, அது மாதிரி ஆள் நான் கிடையாது. அந்தக் காலம் எல்லாம் எப்பவோ மலையேறிப் போச்சு. இதுபோல இனிமேல் நடக்காது. உன் வேலையை பார். நீ நினைக்கறது எல்லாம் தெரியும். நான் யார் கூடயும் ஓடிட மாட்டேன். யார்கிட்டயும் போயிட மாட்டேன், கம்முனு விடு.இவ்வாறு அந்த உரையாடல் செல்கிறது.

Tags : anyone ,
× RELATED யாரையும் நம்பி நான் இல்லை!