சங்கரன்கோவிலில் மாற்றுக்கட்சியினர் 100 பேர் திமுகவில் இணைந்தனர்

சங்கரன்கோவில், நவ. 22: சங்கரன்கோவிலில் மாற்றுக்கட்சிகளில் இருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் சங்கரன் தலைமை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் சங்கர், வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதி கணேசன், நகர துணை செயலாளர்கள் சண்முகம், பூலித்துரை, முத்தாத்தாள், நகர மாணவரணி அப்பாஸ், வார்டு நிர்வாகிகள் ஜிந்தாமைதீன், அப்துல்காதர், இப்ராஹிம், செய்யதுஅலி முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா வரவேற்றார். நகர சிறுபான்மை அணி அமைப்பாளர் மைதீன்அலி தொகுத்து வழங்கினார். முன்னாள் அமைச்சர் தங்கவேல் சிறப்புரையாற்றினார்.

தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் பேசுகையில், வரும் தேர்தலில் ஸ்டாலின் முதல்வராக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும், கட்சியில் பல ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார். மாற்றுக்கட்சியில் இருந்து இணைந்த நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.

 இதில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பத்மநாபன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குமார், தலைமை பேச்சாளர் மாரியப்பன், இளைஞரணி  பிரகாஷ், சரவணன் கார்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு குமார், ராஜ், நிர்வாகிகள்  வெள்ளத்துரை, காளிராஜ், செய்யதலி, வேல்ராஜ், வேலாயுதம், முத்து மணிகண்டன்,  வக்கீல் அணி ஜெயக்குமார்,   எஸ்எம்டி யாசின் , ரசூல்மைதீன், அப்துல்ஹக்கீம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அன்சாரி என்ற செய்யது இப்ராகிம் செய்திருந்தார்.

Related Stories: