அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெறுவோம் விழுப்புரத்தில் ஜிகே வாசன் பேட்டி

விழுப்புரம், நவ. 21: அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெறுவோம் என ஜிகே வாசன் விழுப்புரத்தில் தெரிவித்துள்ளார்.  விழுப்புரத்துக்கு வந்த தமாகா தலைவர் ஜிகே வாசன் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சர்ச்சையில் சிக்கிய விவகாரத்தில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும். கல்வி பிரச்னையில் கால தாமதம் கூடாது. பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் அரசின் முடிவு சிறப்பானதாக இருக்க வேண்டும். அதேபோல், 10, 11, 12ம் வகுப்புக்கான தேர்வு எப்போது என்று தெளிவுபடுத்திடவேண்டும். டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதிவரை மாவட்டத்தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. தமாகாவின் பலத்திற்கு ஏற்ப, அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற்று களம் காண்போம். விவசாயிகளுக்கான மசோதாவை கண்டித்து, எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குழப்பத்தையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தன. ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மீனவர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்திட வேண்டும். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விரைவில் முற்றுப் புள்ளிவைக்க வேண்டும். பருவமழைக் காலங்களில் தண்ணீரை சேமிக்க, நீர்நிலைகளை தூர்வாரிட வேண்டும், என்றார்.

Related Stories:

>