புதிதாக 54 பேருக்கு கொரோனா புதுவையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 621 ஆக குறைந்தது

புதுச்சேரி, நவ. 21: புதுச்சேரியில் நேற்று புதிதாக 54 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.  இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், புதுச்சேரியில் நேற்று 3,468 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை - 43, காரைக்கால் - 2, மாகே - 9 என மொத்தம் 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. உயிரிழப்பும் எதுவும் இல்லை. அதேநேரத்தில், தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 609 ஆக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது.

 புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 36,585 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 621 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 101 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,355 (96.64 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. அடுத்த 2 மாதங்களில் பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகள் வருகின்றன. ஆகையால் கொரோனா தொற்று குறைந்துள்ளது என கருதி பொதுமக்கள் சாதாரணமாக இருந்துவிட கூடாது. விழிப்போடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: