விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

விழுப்புரம், நவ. 21: விக்கிரவாண்டி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அக்கட்சியின் தேர்தல் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளவர்கள் முன்கூட்டியே, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மண்டல பொறுப்பாளர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பே கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவருடன் தொடர்பிலிருந்த குடும்பத்தினர், கட்சியினர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

Related Stories:

>