மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா; இருவர் பலி

கோவை, நவ. 20: கோவை மாவட்டத்தில் புதியதாக நேற்று 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  அதன்படி, கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று புதியதாக 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 219-ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களை விட குணமடைந்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 152 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 845-ஆக உள்ளது.

நேற்று கொரோனா தொற்றினால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 58 வயது பெண், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 55 வயது பெண் என இருவர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 595-ஆக உயர்ந்தது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 779 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Related Stories: