×

பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

நாகர்கோவில், நவ.20: குமரி மாவட்ட கலெக்டர் எம்.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2021 குமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில்  வெளியிடப்பட்டது. 01.01.2021ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், இறந்த, இடம் பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும், பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் மேற்கொள்ளவும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யவும், பொதுமக்கள் உரிய படிவங்களை பெற்று 15.12.2020 வரை தங்கள் பகுதியிலுள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கலாம்.
மேலும் 21.11.2020 (இன்று) 22.11.2020 (நாளை) மற்றும் 12.12.2020, 13.12.2020 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

Tags : camp ,
× RELATED திருவாரூர் முத்துப்பேட்டை இலவச...