×

அணைக்கட்டு ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளில் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

அணைக்கட்டு, நவ.21: அணைக்கட்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என பிடிஓக்கள் உத்தரவிட்டனர்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ‘ஜல் ஜீவன் மிஷன்’ எனும் மத்திய அரசு திட்டத்தில் குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் தனி குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் கடந்த மாதம் தொடங்கியது.முதற்கட்டமாக 24 ஊராட்சிகளில் செயல்படுத்தபட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை கடந்த 2 வாரமாக பிடிஓக்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து வல்லண்டராமம், வேப்பங்குப்பம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் இறுதிக்கட்டத்தில் நடந்து வரும் பணிகளை பிடிஓக்கள், பொறியாளர்கள் ஆகியோர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

அப்போது, 24 ஊராட்சிகளிலும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்கவே0ண்டும் என ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கான்ட்ராக்டர்களுக்கு பிடிஓக்கள் இமயவரம்பன், வின்சென்ட்ரமேஷ்பாபு ஆகியோர் உத்தரவிட்டனர்.இந்நிலையில், குடிநீர் பணிகள் விரைந்து முடித்துவிட்டதாக அரசுக்கு கணக்கு காண்பிக்க அவசர, அவசர கோலத்தில் அரைகுறையாக முடிக்காமல் கோடை காலத்திலும் தண்ணீர் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் முழுமையாக முடிந்த பின்னரே மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இதனை பிடிஓக்கள், பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : completion ,Dam Union ,
× RELATED பாலக்காட்டில் எம்பி தொகுதி நிதி ரூ.2.26...