வேலூரில் சிறைக்காவலர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பைக் பேரணி

வேலூர், நவ.21: வேலூரில் கொரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய சிறைக்காவலர்கள் பைக் பேரணியில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. மேலும் காவல்துறை சார்பில் முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினர்.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறைச்சாலை சார்பில் சிறைக்காவலர்களை கொண்டு பைக் பேரணி நேற்று காலை நடந்தது. இந்த பேரணியை சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறை வளாகத்தில் இருந்து தொடங்கிய ைபக் பேரணி டிஐஜி அலுவலகம் வழியாக, சிறைக்காவலர் குடியிருப்பு, சிறைக்காவலர்களுக்கான பயிற்சி மைதானம் வழியாக பாகாயம் வரை சென்று மீண்டும் சிறை வளாகத்தில் முடிவடைந்தது. இதில் விழிப்புணர்வு வாசகங்களுடன் சென்ற சிறைக்காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories:

>