விவசாயிகள் கவலை பாபநாசம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.40,500 பறிமுதல்

பாபநாசம், நவ. 20: பாபநாசம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.40,500யை பறிமுதல் செய்தது.தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலக சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தல், திருமண பதிவு, நில ஆவணங்கள் தொடர்பான வில்லங்க சான்றிதழ் பெறுதல் உள்ளிட்டவை பெற லஞ்சம் வாங்குவதாக தஞ்சை லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் சென்றன.

இதைதொடர்ந்து பாபநாசம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மனோகரன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, சசிகலா, ரமேஷ் குமார் அடங்கிய குழுவினர் நேற்று மாலை சோதனை நடத்தினர்.இதில் சார் பதிவாளர் ஜெயசீலா ராணியிடம் இருந்து ரூ.21,000, உதவியாளர் சேகரிடம் இருந்து ரூ.1,300, அலுவலக உதவியாளர் காமராஜிடம் இருந்து ரூ.1,500, பத்திர எழுத்தர் பாரதிதாசனிடம் இருந்து ரூ.9,200, உதவியாளர் திருமாலிடம் இருந்து ரூ.7, 200 என மொத்தம் கணக்கில் வராத ரூ.40,500 கைப்பற்றப்பட்டது.இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் நேற்று இரவு ஒப்படைத்தனர். மேலும் நேற்று 13 ஆவணங்கள் பதிவான நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

Related Stories: