26ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்பு சங்க நிர்வாகிகள் தகவல்

வேலூர், நவ.20:வரும் 26ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.வேலூர் தலைமை தபால் அலுவலகம் அருகே பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கவேலு, பொருளாளர் பிச்சாண்டி, தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், ‘மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 26ம் தேதி 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்’ என்றனர்.

Related Stories:

>