ஒடுகத்தூர் அடுத்த தாங்கல் கிராமத்தில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஒடுகத்தூர், நவ.20: ஒடுகத்தூர் அடுத்த தாங்கல் கிராமத்தில் சாலையோரம் இருக்கும் மின்கம்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால், சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒடுகத்தூரில் இருந்து அணைக்கட்டு செல்லும் சாலையில் உள்ள தாங்கல் கிராமத்தில் சாலையோரம் உள்ள மின்கம்பம் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் எங்கே தன் மீது விழுந்து விடுமோ என்று அச்சமுடன் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>