×

திண்டிவனத்தில் துணிகரம் கூகுள் பே மூலம் நூதன முறையில் ₹55 ஆயிரம் அபேஸ் போலீசார் விசாரணை

திண்டிவனம், நவ. 13:  திண்டிவனத்தில் கூகுள் பே மூலம் நூதன முறையில் 55 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் துரைசாமி ஆசாரி தெருவை சேர்ந்தவர் சுப்புராவ் மகன் பிரகாஷ் ஜாதவ் (45). இவர் மகாராஷ்டிராவில் உள்ள உறவினருக்கு அவரது மனைவி செல்போன் மூலம் 16 ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார். இவர் அனுப்பிய 16 ஆயிரம் ரூபாயை அவரது உறவினர் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். அதில் 6 ஆயிரம் ரூபாய் மட்டும் சென்றுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் அனுப்ப முடியவில்லை. இதனால் அவர் கூகுல் பே கஸ்டமர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு அவர், யார் வங்கிக்கணக்கிலிருந்து பணம் அனுப்பப்பட்டதோ அவர்களின் வங்கி முழு விபரம் கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ் ஜாதவ் மனைவியின் தொலைபேசி எண்ணை கொடுத்து இதற்கு தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

அப்போது அந்த நபர் பிரகாஷ் ஜாதவின் மனைவி செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் பணம் 10 ஆயிரம் ரூபாயை திருப்பி அனுப்பி விடுகிறேன் என தொலைபேசி எண், ஆதார் கார்டு எண், ஏடிஎம் கார்டு எண், பின் நம்பர் ஆகிய முழு விபரமும் பெற்றுக்கொண்டு, அந்த நபர் உங்களுக்கு பணம் அனுப்ப முடியாது. வேறு யாராவது அக்கவுண்ட் நம்பரை கொடுங்கள் அதற்கு அனுப்பி விடுகிறேன் என தெரிவிக்க, பிரகாஷ் ஜாதவ் உடைய வங்கி முழு விபரமும் தெரிவித்துள்ளனர். இருவருடைய வங்கிக்கணக்கு முழு விவரங்களையும் சேகரித்து கொண்டு, 3 முறையாக 55 ஆயிரம் ரூபாய் பணத்தை நூதன முறையில் வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துள்ளனர். இதனால் பிரகாஷ் ஜாதவ் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...