ரேஷனில் வழங்கப்பட்டு வருவது பிளாஸ்டிக் அரிசி அல்ல செறிவூட்டப்பட்ட அரிசிதான்

திருச்சி, நவ.13: பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 100 கிலோ அரிசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து விநியோகிக்கப்படுகிறது. ஆனால் சிலர் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக தவறாக நினைத்து மக்கள் மத்தியில் தவறான தகவல் அளித்து வருகின்றனர். செறிவூட்டப்பட்ட அரிசியால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் ஊட்டச்சத்து நிறைந்து கிடைக்கப் பெறுகின்றனர். செறிவூட்டப்பட்ட அரிசி வெண்ணிறமாக இருப்பதால் பொதுமக்கள் எவரும் இதனை பிளாஸ்டிக் அரிசி என்றோ, கலப்பட அரிசி என்றோ, எண்ண வேண்டாம். பொதுமக்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை பெற்று பயனடையலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: