×

மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு வீல் சேர்

கிருஷ்ணகிரி, நவ.11:. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் வீல்சேர் வழங்குவதற்கான நேர்முக தேர்வு நடைபெற்றது. இதில் தசைச்சிதைவு நோய் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட 8 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அவற்றில் 4 மாற்றுத்திறனாளிகள் தேர்வு குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ₹1 லட்சம் வீதம் ₹4 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் வீல் சேர்களை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார். நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், முடக்கியல் வல்லுநர் பிரகாஷ், எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவர் தியாகராஜன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன்கள் பெற விண்ணப்பிக்கலாம்