அதிகாரிகளை ‘கவனித்தும்’ நில அளவை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பு

சேலம், நவ.3: சேலம் ஓமலூர் அடுத்த பச்சனம்பட்டியைச் சேர்ந்த தமாகா ெதாழிற்சங்க தலைவர் சின்னப்பன் மற்றும் சிலர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், பச்சனம்பட்டியைச் சேர்ந்த தம்புராஜ், தனது நிலத்தை அளவீடு செய்ய எஸ்பிஐ வங்கியில் பணம் கட்டி, ஓமலூர் தாசில்தாருக்கு விண்ணப்பித்தார். இதனை தொடர்ந்து பெண் சர்வேயர் ஒருவர், நில அளவைக்காக, பல அதிகாரிகளுக்கு ₹20 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார். வேறுவழியின்றி ₹17 ஆயிரம் கொடுத்த நிலையில், இரண்டு மாதமாகியும் இதுவரை நிலத்தை அளவீடு செய்ய வரவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட சர்வேயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், மற்றொரு மனுவில், கோலுக்காரனூர் பகுதியில் பொதுப்பாதை சாலை அமைக்க தடையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்து மக்கள் கட்சியினர் அளித்த மனுவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கைது ெசய்வதுடன், அக்கட்சியை தடை செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories:

>