×

மேலப்பரவு கிராமத்தில் துணைமுதல்வர் ஆய்வு

போடி, நவ. 1: போடி அருகே முந்தல் அருகே மேலப்பரவு கிராமம் உள்ளது. திமுக ஆட்சியின்போது மலைவாழ் மக்களுக்கு 50 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. மலைவாழ் மக்கள் விவசாயக்கூலி வேலைகளுக்குச் செல்கின்றனர். அடிப்படை வசதிகளின்றி தவித்து வரும் நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாததால் தொகுப்பு வீடுகளில் கீறல்கள் விழுந்து வருகிறது. இதுகுறித்தும், கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என புகார் மனு அளித்தனர். சமீபத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் இப்பகுதி மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டார். இந்நிலையில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மேலப்பரவு மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் இடத்தை பார்வையிட்டு அதற்கான பணி செய்யும் இடத்தையும் ஆய்வு செய்தார். ெதாகுப்பு வீடுகளை சீரமைத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மரிமூர் கண்மாயைப் பார்வையிட்டு அதனை சீரமைக்கவும் உறுதியளித்தார்.

Tags : Deputy Chief Minister ,inspection ,village ,
× RELATED தனிநபரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கானது...