×

சாலையில் வாகன ஓட்டிகளை காயப்படுத்தும் கருவேல மரம்

தொண்டி, நவ.1:  தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழயனகோட்டை, திருவெற்றியூர் விலககு உள்ளிட்ட பகுதிகளில் காட்டு கருவை வளர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிககை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியில் மதுரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இது எதிரே வரும் வாகனம் தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலையில் உள்ளது. தொண்டி புதுககுடி விலக்கு ரோடு, பழனகோட்டை, தினையத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ரோட்டின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இது வாகன ஒட்டிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. வளைவுகளில் வளர்ந்துள்ள கருவையால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதனால் விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ள கருவையை அகற்ற பொதுமககள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சாதிக பாட்சா கூறியது, ரோட்டின் இருபக்கமும் வளர்ந்துள்ள காட்டு கருவையால் கடும் சிரமம் ஏற்படுகிறது என்றார்.

Tags : motorists ,road ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...