வானில் அரிய நிகழ்வு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி, நவ.1: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருச்சி கலெக்டர் அலுவலககத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் தேசிய ஒற்றுமை தின நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கலெக்டர் உறுதிமொழியை வாசிக்க அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியை திரும்ப சொல்லி உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரீத்தா, கலெக்டர் பிஏ (விவசாயம்) சாந்தி, சமூகபாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி, அலுவலக மேலாளர் (குற்றவியல்) சிவசுப்ரமணியபிள்ளை அலுவலக மேலாளர் (பொ) சத்தியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>