வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்

திருச்சி, நவ.1: வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 சட்ட மசோதாக்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் எதிர் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு எதிரான 3 சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் அருணாசல மன்றத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் 15 பெண்கள் உள்பட 75க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>