×

தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல் பிரதமர் வீடு வழங்கும் திட்டப்பணிகள்

திருத்துறைப்பூண்டி, நவ.1: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம், பிரதமர் வீடு வழங்கும் திட்டப்பணிகள், மகளிர்குழு வாழ்வாதரதிட்டம் செயல்பாடுகள் குறித்து தேசிய அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்கள் சந்தோஷ்பதாரி, சுமித்திரா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். முத்துப்பேட்டை ஒன்றியம் விளங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டப்பணிகள் , பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டுவரும் வீடுகள், மகளிர் குழுவினருக்கு மத்திய அரசு கடன் வழங்கும் திட்டம், முதியோர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களைதேசிய அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் சந்தோஷ் பதாரி , சுமித்திராஆய்வு செய்தனர். இதில்உதவி திட்ட அலுவலர் தமிழ்மணி, ஒன்றிய குழு தலைவர் கனியமுதாரவி, ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், வெற்றியழகன், ஒன்றிய பொறியாளர்கள் வேதவிநாயகம், சாந்தி, பணி மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Workers' Union ,
× RELATED சலவை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்