×

எஸ்பி வழங்கினார் தக்காளி விற்பனை மும்முரம் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு சமம்

பெரம்பலூர், நவ 1: மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்துவது என்பதுஜனநாயகத்தை மெல்ல மெல்ல கழுத்து நெறித்து கொலை செய்யப்படுவதற்கு சமம் என பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும், மத்தியில் ஆளும் பிஜேபி அரசும் ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படுகிறது.

பேச்சுரிமை, எழுத்துரிமை, போராடுவதற்கான உரிமை இந்த ஜனநாயகத்திற்கு உண்டு.எனவே அந்த உரிமை மறுக்கப்படுகிறது என்பதுஜனநாயகத்தை மெல்ல மெல்ல கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு சமம். எனவே இந்த உரிமைகளை தர வேண்டும். எதிர்ப்பு குரலும், விமர்சனமும்தான் ஜனநாயகத்தின் உயிர் நாடி. இவைகளுக்கு எதிராக ஒரு அரசு செயல்படுகிறது என்றால் ஜனநாயக மாண்பு மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.
இதனை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது என்றார்.நிகழ்ச்சியில் மாநில மகளிரணி தலைவி சுதாராமகிருஷ்ணன், தெலுங்கானா மேலிடப்பொறுப்பாளர் ஜான் அசோக் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : SP ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்