×

திருக்கடையூரில் சுகாதார கேட்டை ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்க கோரிக்கை

தரங்கம்பாடி, நவ.1: திருக்கடையூரில் சம்பா பயிர்களை நாசம் செய்யும், மேலும் அப்பகுதியில் சுகாதார கேடுகளை விளைவிக்கும் பன்றிகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதிபட்டு வருவதால் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் வயல்களில் நடப்பட்டுள்ள சம்பா பயிர்களை அந்த பகுதியில் உள்ள பன்றிகள் கூட்டமாக வந்து நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். மேலும் திருக்கடையூரில் பிரசித்திப்பெற்ற அமிர்தகடேஸ்வரர்கோவில் உள்ளது. இங்கு காளசம்ஹாரமூர்த்தி தனிசன்னதியில் இருந்து அருள்பாலித்து வருகிறார். 60, 70, 80 பிறந்தநாளில் இக்கோவிலுக்கு வந்து அமிர்தகடேஸ்வரர் அபிராமிஅம்மன், காலசம்ஹாரமூர்த்தி சந்நிதியில் வழிபாடு செய்வதும் ஆயில்ஹோமம் செய்து கொள்வதும் சிறப்பாக கருதபடுகிறது.

தினமும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருவதால் மக்கள் நடமாடும் அதிகம் உள்ள பகுதியாக திருக்கடையூர் இருந்து வருகிறது. இவ்வூரில் 100க்கணக்கான பன்றிகள் கோவில்வளாகம், சன்னதிதெரு, கடைதெரு என எல்லா இடங்களிலும் சுற்றித்திரிவதால் சுகாதார கேடுகளை விளைவிக்கும் ஆபத்து உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைகின்றனர். பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அரசு நிர்வாகம் அலட்சியப்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் பன்றிகளை பிடித்து அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க. வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...