×

கொரோனா அச்சம் குறைந்ததா? முக கவசம் அணியாமல் சுற்றி திரியும் மக்கள்

கரூர், நவ. 1: பொதுமக்களிடையே கொரோனா பீதி தற்போது குறைந்து வருவதும், முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிவதும் சகஜமாக நடைபெற்று வருவதால் திரும்பவும் கரூர் மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் இதுநாள் வரை கொரோனாவால் 4132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3810 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போதைய நிலையில் 278 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவான அளவில் இருந்த நிலையில் நேற்று 24 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மக்களிடையே போதிய விழிப்புணர்வும், பயமும் இல்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. தற்போது, வழக்கம் போல அனைத்து பகுதிகளும் செயல்பட்டு வருகின்றன. ஜவுளி கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளுக்கு வரும் பொதுமக்களில் பலர் முகக்கவசம் அணியாமல் பீதியின்றி உலா வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் இருந்த விழிப்புணர்வு தற்போது முற்றிலும் குறைந்துள்ளது. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் திரும்பவும் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே கரூர் மாவட்ட நிர்வாகம், அனைத்து நிறுவனங்களுக்கும், முகக்கவசம் அணியாமல் வருபவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்பன போன்ற விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Corona Fear Low ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...