×

அதிவேகமாக பயணிக்கும் டிப்பர் லாரிகளால் விபத்து அபாயம்

ஊட்டி,நவ.1:வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கட்டுமான பொருட்கள் மற்றும் தார் கலவைகளை ஏற்றி வரும் லாரிகள் வேகமாக இயக்கப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளுக்காக நாள் தோறும் ஏராளமான டிப்பர் லாரிகள் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து மணல், ஜல்லி கற்கள், செங்கல், கம்பிகள் மற்றும் இதர ெபாருட்களை ஏற்றி வருகின்றன. குறிப்பாக, சமவெளிப் பகுதிகளில் இருந்தே தார் கலவைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. மாவட்டத்தில் எங்கு சாலை அமைக்கும் பணிகள் நடந்தாலும், நாள் ஒன்றுக்கு 50 லாரிகள் வரை வந்துச் செல்கின்றன. இந்த லாரிகள் குறித்த ேநரத்திற்குள் தார் கலவையை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக வேகமாக இயக்குகின்றனர்.

மலைப்பாங்கான சாலைகளிலும் இந்த வாகனங்கள் அசுர வேகத்துடன் இயக்கப்படுகிறது. வளைவுகள், குறுகிய சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் வேகமாக லாரிகள் இயக்கப்படுகிறது. இதனால், அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. தார் கலவையை ஏற்றி வரும் லாரிகள் மட்டுமன்றி கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் லாரிகளில் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் விபத்து ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வேகமாக இயக்கப்படும் டிப்பர் லாரிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும். பெரிய விபத்துக்கள் ஏதும் ஏற்படும் முன் இந்த லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED தாவரவியல் பூங்கா – படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கம்