46புதூர் பஸ் ஸ்டாண்டை குப்பை தரம் பிரிக்கும் களமாக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ஈரோடு,நவ.1: ஈரோடு அடுத்துள்ள 46புதூர் பஸ் ஸ்டாண்டினை குப்பைகள் தரம் பிரிக்கும் களமாக பயன்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு அடுத்துள்ள 46புதூரில் கடந்த 2014ம் ஆண்டு புறநகர் பஸ் ஸ்டாண்டு என்ற பெயரில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டது. அதாவது தென்மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டில் 5 நிமிடங்கள் நின்று செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் நேரமின்மை காரணமாக இந்த பஸ் ஸ்டாண்டிற்குள் எந்த பஸ்சும் வந்து செல்வதில்லை. இதனால் கடந்த 6 ஆண்டுகளாக பஸ் ஸ்டாண்டு பயனற்று கிடக்கிறது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை அங்கு கொட்டி, பிரித்து எடுக்கும் களமாக பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குப்பைகளை கொட்டினால் சுகாதாரம் பாதிக்கப்படும் என்றும், இப்பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புகள், காவலர் குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் உள்ளதால் குப்பைகளை கொட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பா.ஜ.சார்பில் இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: