×

தொட்டியம் அருகே மின்கசிவால் விவசாயி வீடு தீயில் சேதம்

தொட்டியம், அக்.30: தொட்டியம் அருகே காடுவெட்டி ஊராட்சி வடக்கு தெருவில் வசிப்பவர் சிவகுமார்(45). விவசாயி. இவரது கூரை வீட்டில் நேற்று மின்கசிவு காரணமாக எதிர்பாராதவிதமாக தீ பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவி வீடு முற்றிலும் எரித்து சாம்பலானது. இதில் ஒரு லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இச்சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : house ,electrocution ,
× RELATED உயர்மின் கோபுரத்திற்கு எடுத்த...