பூமி பூஜை விழா வயிற்று வலியால் அவதி இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

தொட்டியம், அக்.30: தொட்டியம் அடுத்த உன்னியூர் முதல் தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் (39) என்பவரது மனைவி நிர்மலா தேவி (35). கடந்த சில தினங்களாக நிர்மலாதேவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக சிகிச்சை மேற்கொண்டும் சரிவர குணமாகாத நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மோகனூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Related Stories:

>