டாஸ்மாக்கில் குவிந்த மதுபிரியர்கள் அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம்

திருச்சி, அக்.30: பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவர் பாஸ்கர், கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் பாஜகவினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் படம் வைக்க வேண்டும் என தமிழக அரசாணை உள்ளது. இந்த அரசாணையை அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்த வேண்டும். இரண்டு நாட்களுக்குள் பிரதமர் படம் வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மணப்பாறை: மணப்பாறை தாசில்தார் அலுவலகம் மற்றும் ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பாரத பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் வைக்க வேண்டும் என பாஜகவின் பட்டியல் அணி மண்டல நிர்வாகிகள் துரைச்சாமி, பாண்டியன் ஆகியோர் தலைமையில் மணப்பாறை தாசில்தார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நேற்று மனு கொடுக்கப்பட்டது.

Related Stories:

>