×

கூடுதல் விலைக்கு விற்றதால் உரக்கடையில் விற்பனைக்கு தடை

கும்பகோணம், அக். 30: கும்பகோணம் வட்டாரத்தில் சம்பா சாகுபடி நடந்து வரும் நிலையில் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவு உரங்கள் இருப்பு உள்ளதா என்று உதவி இயக்குனர் விஜயலட்சுமி, உர ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா, விற்பனை முனையத்தில் மிஷின் மூலம் பில் கொடுக்கப்படுகிறதா என ஆய்வு செய்யபட்டதில் ஒரு தனியார் சில்லரை உர விற்பனை நிலையத்தில் உர கட்டுப்பாடு ஆணையில் தெரிவிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு 14 நாட்கள் விற்பனை செய்ய தடை உத்தரவிடப்பட்டது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : grocery store ,
× RELATED மளிகை கடை கோவிலில் திருட்டு